உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும். இதன் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” ஆகும். இது “வெர்பினேசியே” தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் ‘டெக்டன்’ என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது. “கிராண்டிஸ்” என்றால் பிரமாதமானது என அர்த்தமாகும். அதாவது இந்த மரம் “தச்சர்களுக்கு உகந்த பிரமாதமான மரம்” என்ற பொருளில்…
கன்னியாகுமரி பெண் விவசாயியின் இயற்கை அன்னாசி
இயற்கை விவசாய முறையில் ரப்பர் மரங்களுக்கு இடையே அன்னாசியை ஊடுபயிராகப் பயிரிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் கன்னியாகுமரி பெண் விவசாயி. ரப்பருக்கான விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், இது வரவேற்கத் தகுந்த மாற்றமாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிரேஸ் ராணி. இந்த மாவட்டத்துக்கே உரிய ரப்பர் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்.…
கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கரில் நடவு
ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 30 கிலோ விதை நெல் பயன்படுத்தும் காலத்தில் கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் நடவு செய்து சாதனை படைத்து வருகிறார் விவசாயி ஆர்.பெருமாள். ஒற்றை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்து வரும் பெருமாள் 50 செ.மீ. நீளம், 50 செ.மீ. அகலம் (50X50) என்ற…
இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி- பூண்டு -மிளகாய் கரைசல் செய்வது எப்படி?
பூண்டு 1 kg எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக…
தோட்ட பயிர்களுக்கு செலவு இல்லா இயற்கை பூச்சி விரட்டி
பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழலினை மாசுபடாமல் பாதுகாக்கலாம்.மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி இருக்கும்.உடல் நலத்திற்கும் ஏற்றது. இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை…
வீட்டுக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பு
நாம் நமது வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்களுக்கு வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம். மற்ற உரங்களைவிட இது நமக்கு எளிதானது மற்றும் செலவு இல்லாதது. இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள். இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே…
வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு
வேப்பிலை, வேப்பம் பருப்பு ஆகியவற்றிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரித்து, பயிர்களைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளை விவசாயிகள் கற்றுணர்ந்து பயன்பெற வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. வேப்பவிதைக் கரைசல்: இந்தக் கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு 3 முதல் 5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம் பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை…
தமிழ்நாடு மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் மற்றும் அதன் முகவரிகள்
வ.எண் மாவட்டம் ஆய்வுக்கூடம் முகவரி 1. கோயமுத்தூர் மண் பரிசோதனை ஆய்வு கூடம் பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் உர சோதனை ஆய்வு கூடம் லாலி ரோடு, கோயமுத்தூர் – 641013 2. கடலூர் மண் பரிசோதனை ஆய்வு கூடம் நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம் பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் உயிர் உரங்கள் தயாரிப்பு…
வெள்ளைப்பூண்டு சாகுபடி
இது ஒரு மணமூட்டும் பயிர். வணிக ரீதியில் நம் நாட்டில் பயிரிடப்படுகிறது. வைட்டமின் பி6, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, காப்பர், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சைப்பூண்டில் அஸ்கார்பிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் மலைப்பூண்டு பிரபலம். மேல்பழநி மலைப்பகுதிகளான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை பகுதிகளில் அதிக…
வசம்பு – பூச்சிவிரட்டி
வசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர். நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10…