இந்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சக நிறுவனமான இது. விதையை ஆராய்ச்சி செய்ய, சான்று வழங்க, பயிற்சி தர உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்புமிகு பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ளது. விதையை தரமாக தயாரிக்க தரத்தை உயர்த்த இது பாடுபடுகிறது.சிறந்த தர கட்டுப்பாடு ஆய்வகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரே மாதிரியான தரத்துடன் இந்திய அளவில்…
இயற்கை முறை கத்தரி சாகுபடி
இயற்கை மற்றும் உயிர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கத்தரி சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். உடல் நலனை பாதிக்காத, சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு விவசாயிகளுக்கு இருக்கிறது. விஷத்தன்மையற்ற விளை பொருள்களை விளைவிப்பதன் மூலம், நோயற்ற…
களையை கட்டுப்படுத்த நிழற்போர்வை
தர்மபுரி மாவட்டத்தில், நிலங்களில் களையை கட்டுப்படுத்த, விவசாயிகள் நிழற்போர்வை அமைக்க, ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, தக்காளி, மா, கரும்பு, துவரை, பருத்தி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், காய்கறி பயிர்கள் மற்றும் மலர் சாகுபடி முக்கிய பங்கு வகித்து வருகிறது.பட்டன் ரோஸ், சாமந்தி, சம்மங்கி,…
கோவையில் வீட்டுத்தோட்டம் அமைக்க மானியம்
கோவையில் நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வாழும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டுக் கொள்ள, தமிழக அரசு நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம், தற்போது, கோவை மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ளது.…
அதிக விலை மதிப்புள்ள அகர் மரம் வளர்ப்பு
உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள அகர் மரம் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறது கர்நாடகாவில் உள்ள ஓர் அமைப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் 150 ரூபாய்க்கு மேல்…’ என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்? ஒரு கிலோ அகர் எண்ணெய் ஒரு லட்சம் ரூபாய் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது என்ன அகர்…
கன்னியாகுமரி பெண் விவசாயியின் இயற்கை அன்னாசி
இயற்கை விவசாய முறையில் ரப்பர் மரங்களுக்கு இடையே அன்னாசியை ஊடுபயிராகப் பயிரிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் கன்னியாகுமரி பெண் விவசாயி. ரப்பருக்கான விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், இது வரவேற்கத் தகுந்த மாற்றமாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிரேஸ் ராணி. இந்த மாவட்டத்துக்கே உரிய ரப்பர் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்.…
தோட்ட பயிர்களுக்கு செலவு இல்லா இயற்கை பூச்சி விரட்டி
பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழலினை மாசுபடாமல் பாதுகாக்கலாம்.மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி இருக்கும்.உடல் நலத்திற்கும் ஏற்றது. இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை…
வீட்டுக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பு
நாம் நமது வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்களுக்கு வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம். மற்ற உரங்களைவிட இது நமக்கு எளிதானது மற்றும் செலவு இல்லாதது. இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள். இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே…
வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு
வேப்பிலை, வேப்பம் பருப்பு ஆகியவற்றிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரித்து, பயிர்களைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளை விவசாயிகள் கற்றுணர்ந்து பயன்பெற வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. வேப்பவிதைக் கரைசல்: இந்தக் கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு 3 முதல் 5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம் பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை…
செலவு குறைந்த கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி
மார்க்கெட் சென்றால் எந்த காய்கறி எந்த விலை என்று பயந்து கொண்டே கேட்க வேண்டி இருக்கிறது! இந்த வாரம் தக்காளி விலை அதிகம் என்றால் போன வாரம் வெங்காயம் விலை அதிகம்! விளைப்பு குறைந்ததும், வெகு தூரத்தில் இருந்து காய்கறி கொண்டு வருவதால் அதிகரிக்கும் செலவும் காய்கறி விலை ஏற்றத்திற்கு காரணம்.. அபர்ட்மெண்ட் மொட்டை மாடிகளில்…