உரங்கள்

தோட்ட பயிர்களுக்கு செலவு இல்லா இயற்கை பூச்சி விரட்டி

பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழலினை மாசுபடாமல் பாதுகாக்கலாம்.மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி இருக்கும்.உடல் நலத்திற்கும் ஏற்றது. இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை…

வீட்டில் எளிய முறையில் மண்புழு உரம் தயாரிப்பு

மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம். இத்தகைய சூழலில் மண்புழு உர தயாரிப்பினை பெரிய அளவில் செய்து வருவது வியாபார நோக்கமாகும். இதனால் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் அவரவர் இல்லங்களிலேயே சிறிய முதலீட்டில் தங்கள்…

வீட்டுக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பு

நாம் நமது வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்களுக்கு வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம். மற்ற உரங்களைவிட இது நமக்கு எளிதானது மற்றும் செலவு இல்லாதது. இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள். இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே…

வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு

வேப்பிலை, வேப்பம் பருப்பு ஆகியவற்றிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரித்து, பயிர்களைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளை விவசாயிகள் கற்றுணர்ந்து பயன்பெற வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. வேப்பவிதைக் கரைசல்: இந்தக் கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு 3 முதல் 5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம் பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை…

வசம்பு – பூச்சிவிரட்டி

வசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர். நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10…

ரோஜா சாகுபடி

இரகங்கள் : எட்வர்ட் ரோஜா மற்றும் ஆந்திர சிகப்பு ரோஜா இவைகள் வணிக ரீதியாக பயிர் செய்வதற்கு மிகவும் ஏற்ற இரகங்கள். இதைத் தவிர இன இரகங்கள் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு நிறங்களில் பூக்கும் இரகங்களையும் பயிர் செய்யலாம். ஆந்திர சிகப்பு ரோஜா எட்வர்ட் ரோஜா மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால்…

உரச் செலவை குறைக்கும் வழிமுறைகள்

விவசாயத்தில் முக்கிய இடுபொருள்களான விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், விவசாயக் கூலி ஆகியவற்றின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு உரங்களின் மானிய செலவைக் குறைப்பதற்காக யூரியா தவிர்த்து ஏனைய உரங்களின் விலை கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. இந்த காரணங்களால் சாகுபடி செலவைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து…

கீரை சாகுபடி

கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும். நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம். பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம். கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய…

தென்னை ஊடு பயிராக கோகோ பயிர்டுவது எப்படி?

தென்னை, பாக்கு தோட்டங்களில் கோகோ பயிர் ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம். உகந்த இடம்: பணப்பயிராக விளங்கும் கோகோ சாகுபடி செய்ய 50 சதம் நிழல் உள்ள பகுதிகளே தேவை. களிமண், கடலோர மணல் பகுதிகளில் சாகுபடி செய்ய முடியாது. தட்பவெப்ப நிலை: கோகோ பயிரானது வறட்சியைத் தாங்காது. எனவே,…

வெங்காய சாகுபடியில் சாதனை படைக்கும் சிவில் இன்ஜினியர்

சிவில் இன்ஜினியராக இருந்து சாதிக்க முடியாததை, வெங்காய சாகுபடியில் சாதித்துள்ளார் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த வேல்ஆண்டவர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் வேல்ஆண்டவர். மதுரை தியாராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் 1987ல் சிவில் இன்ஜினியரிங் முடித்தார். இவ ருடன் படித்த பலரும் படிப்புக்கேற்ற வேலை, வருவாய்…