தகவல்கள்

தென்னையில் அதிக விளைச்சல் பெறும் வழிமுறைகள்

தேங்காயின் விலை முந்தைய காலகட்டத்தை விட அதிகமாக இருக்கிறது. அதிக விளைச்சல் இருக்கும் நிலையில் குறைந்த விலையில் தேங்காய்கள் கிடைக்கும் படி செய்யலாம். பணப்பயிர்களில் அமுதசுரபி போல் திகழும் தேங்காய்களை அதிக விளைச்சல் மூலம் பெற்றிட விவசாயிகள் சரியான உரநிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இயற்கை உரங்களான தொழுஉரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு…

நிலப்போர்வை அமைத்து விவசாயம்

கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலப்போர்வை எனப்படும் “மல்ச்சிங்’ முறையை விவசாயிகள் கடைபிடித்தால், அதிக மகசூல் பெற முடியும். கோடை காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படுவது இயற்கையே. மின்வெட்டு மற்றும் தண்ணீர் பிரச்னையை விவசாயிகள் கட்டாயம் சமாளித்தாக வேண்டும். சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் நிலப்போர்வை…

வெங்காய சாகுபடியில் சாதனை படைக்கும் சிவில் இன்ஜினியர்

சிவில் இன்ஜினியராக இருந்து சாதிக்க முடியாததை, வெங்காய சாகுபடியில் சாதித்துள்ளார் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த வேல்ஆண்டவர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் வேல்ஆண்டவர். மதுரை தியாராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் 1987ல் சிவில் இன்ஜினியரிங் முடித்தார். இவ ருடன் படித்த பலரும் படிப்புக்கேற்ற வேலை, வருவாய்…

தக்காளி விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை

தக்காளி நடவு செய்து வரும் விவசாயிகள் அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியை தெளிக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தக்காளி நாற்று நடவு செய்வதற்கு முன்பு, பாத்திகளில் உள்ள தக்காளி நாற்றுகளை எடுத்து, ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பேக்டீரியாவை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில், வேர்பகுதியை நனைத்து,…

பப்பாளி கிராமம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திப்பட்டி கிராம விவசாயிகள் தங்களது தொழில் திறமையை விவசாயத்தில் புகுத்தி சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் இயற்கை உரத்தை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு விளைவிக்கப்படும் பயிர்கள் செழுமையாகவும், உயிர்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குவதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.         வத்திப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சி. ஆண்டிச்சாமி,65.…

அங்கக பொருட்களைச் சந்தைப்படுத்துதல்

அங்கக ஏற்றுமதியாளர்கள் பால்மர் லாரி அன்ட் கோ லிமிடெட் பி – 43, ஹடு ரோடு எக்டன்சன், கொல்லகத்தா – 700088 மேற்கு வங்காளம் / 54bltea@cal3.vsnl.net.in பிபிடிசி எக்ஸ்போர்ட் ஆப்ரேசன் தபால் பெட்டி எண் 573 சுப்பிரமணியன் ரோடு, வில்லிங்டன் ஐலான்ட் கொச்சின் 682003 கேரளா /666251/2ecotea@vsnl.com சேம்மாங் டீ எக்ஸ்போர்ட்ஸ் (பி) லிமிடெட்…

ஆடிப்பட்ட பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பு

ஆடிப்பட்டப் பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பை வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மைய அலுவலகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மானாவாரிப் பயிர்களுக்கு ஆடிப் பட்டம் முக்கியமானது. தென் மேற்குப் பருவமழை இப்பட்டத்தின் உற்பத்தியை தீர்மானிக்கிறது. இந்த ஆண்டு பருவமழை இயல்புக்கு குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானியப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள் மற்றும் காய்கறிகள்…