தகவல்கள்

கன்னியாகுமரி பெண் விவசாயியின் இயற்கை அன்னாசி

இயற்கை விவசாய முறையில் ரப்பர் மரங்களுக்கு இடையே அன்னாசியை ஊடுபயிராகப் பயிரிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் கன்னியாகுமரி பெண் விவசாயி. ரப்பருக்கான விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், இது வரவேற்கத் தகுந்த மாற்றமாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிரேஸ் ராணி. இந்த மாவட்டத்துக்கே உரிய ரப்பர் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்.…

கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கரில் நடவு

ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 30 கிலோ விதை நெல் பயன்படுத்தும் காலத்தில் கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் நடவு செய்து சாதனை படைத்து வருகிறார் விவசாயி ஆர்.பெருமாள். ஒற்றை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்து வரும் பெருமாள் 50 செ.மீ. நீளம், 50 செ.மீ. அகலம் (50X50) என்ற…

வேளாண்மைப் பொறியியல் துறை வழங்குகிறது விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள்

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகளை வேளாண்மைப் பொறியியல் துறை வழங்குகிறது வேளாண்மைப் பணிகளுக்கான ஆள் பற்றாக் குறை என்பது இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு வேளாண் பணிகள் தற்போது இயந்திரமயமாகி வருகின்றன. இச்சூழலில், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தும்…

சோலார் பம்பு செட் அமைக்க 80% அரசு மானியம்

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம்…

வீட்டுக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பு

நாம் நமது வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்களுக்கு வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம். மற்ற உரங்களைவிட இது நமக்கு எளிதானது மற்றும் செலவு இல்லாதது. இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள். இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே…

மண் பரிசோதனை செய்யும் முறை

விவசாயம் செழிக்கவும், மகசூல் அதிகரிக்கவும், மண்வளத்தை காக்கவும்,  விவசாயிகள் கண்டிப்பாக மண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். விவசாயத்துக்கு அடிப்படைத் தேவைகளாக நிலவளம், நீர்வளம் அமைகின்றன. நிலத்தின் வளத்தை நிர்ணயிப்பதில் மண் பரிசோதனையே முக்கியமானதாகும். ஏன் என்றால் மண்ணின் ரசாயன குணங்களும், பயிருக்குக் கிடைக்கக் கூடிய சத்துக்களின் அளவையும் மண் பரிசோதனையின் மூலமாகவே அறிய முடியும். வயலுக்கு…

தமிழ்நாடு மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் மற்றும் அதன் முகவரிகள்

வ.எண் மாவட்டம் ஆய்வுக்கூடம் முகவரி 1. கோயமுத்தூர் மண் பரிசோதனை ஆய்வு கூடம் பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் உர சோதனை ஆய்வு கூடம் லாலி ரோடு, கோயமுத்தூர் – 641013 2. கடலூர் மண் பரிசோதனை ஆய்வு கூடம் நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம் பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் உயிர் உரங்கள் தயாரிப்பு…

வெள்ளைப்பூண்டு சாகுபடி

இது ஒரு மணமூட்டும் பயிர். வணிக ரீதியில் நம் நாட்டில் பயிரிடப்படுகிறது. வைட்டமின் பி6, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, காப்பர், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சைப்பூண்டில் அஸ்கார்பிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் மலைப்பூண்டு பிரபலம். மேல்பழநி மலைப்பகுதிகளான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை பகுதிகளில் அதிக…

பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்கள்

“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப் பூச்சிகளும் விவசாயிகளின் நண்பர்களே” என்கிறார் கோவில்பட்டியில் வேளாண்மை அலுவலராகப் பணியாற்றும் நீ.செல்வம். பூச்சிக்கொல்லி மருந்துகளின் கடுமையான தீமைகள் பற்றியும், வயல்களில் பூச்சிகளைக் கையாள்வதற்கான உத்திகள் பற்றியும் தமிழ்நாடெங்கும் விவசாயிகள் மத்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் செல்வம். அவர்…

உரச் செலவை குறைக்கும் வழிமுறைகள்

விவசாயத்தில் முக்கிய இடுபொருள்களான விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், விவசாயக் கூலி ஆகியவற்றின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு உரங்களின் மானிய செலவைக் குறைப்பதற்காக யூரியா தவிர்த்து ஏனைய உரங்களின் விலை கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. இந்த காரணங்களால் சாகுபடி செலவைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து…