பீஜாமிர்தம் என்றால் என்ன விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும். தயாரிக்க தேவையான பொருட்கள் தண்ணீர் 20 லிட்டர் பசு மாட்டு சாணம் 5 கிலோ பசு மாட்டு கோமியம் 5 லிட்டர் சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை முதல் நாள் மாலை 6 மணிக்கு…
இயற்கை முறையில் துவரை சாகுபடி
தமிழகத்தில் பயறு சாகுபடி வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப் பயிறு, துவரை, கொண்டைக்கடலை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் உளுந்து, பாசிப்பயிறு போன்றவை குறைந்த நாள்களில் விளைச்சல் பெறுவதால், இதன் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. துவரைப் பயறு விளைச்சலுக்கு 105 முதல் 200 நாள்கள் வரை உள்ளதால், இதன் உற்பத்தித் திறன் அதிகமாகும்.…
ஜீவாமிர்தம் இயற்கையான நுண்ணுயிர் கலவை
ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது? தேவையான பொருட்கள்: நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம்…
பார்த்தீனியத்தை பற்றி மேலும் கொஞ்சம்
பல தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பார்த்தீனியத்தை ஒரு எதிரியாக பாவித்து அதனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்திட அதிக காசு செலவு செய்து களைக்கொல்லி மருந்து தெளித்து கடும் நஷ்டத்துக்கு ஏன் மண்ணின் உயிர்க்குலங்கள் நாசமாகி மலடாகி தென்னந்தோப்பே வறண்ட காடு போலக்காட்சியளித்திடச் செய்கிறார்கள். இறைவன் தந்த வரங்கள் தான் தாவரங்கள். அதில் தானாக வளரத் திறன் கொண்ட…
‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்
ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகள் தனது நிலத்திற்கு “அங்ககச் சான்று’ பெற முன்வர வேண்டும். இந்த உத்தி மூலம் ஏற்றுமதி செய்தும் லாபம் பெற வழி உள்ளது. குறிப்பாக “அல்போன்சர்’ ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி…
கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி?
கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் அடையலாம் என்று காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு கூறிய அறிவுரை: கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், 1 ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த இலைகள்…
இயற்கை முறை கத்தரி சாகுபடி
இயற்கை மற்றும் உயிர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கத்தரி சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். உடல் நலனை பாதிக்காத, சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு விவசாயிகளுக்கு இருக்கிறது. விஷத்தன்மையற்ற விளை பொருள்களை விளைவிப்பதன் மூலம், நோயற்ற…
இயற்கை முறையில் தழைச்சத்து தயாரிக்கும் முறை
தழைச்சத்து என்பது மனிதர்களுக்கு புரதச்சத்து போன்றது. பயிரின் வளர்ச்சிக்கு தழைச்சத்து மிக முக்கியமானது. செயற்கை உரத்தில் யூரியா தழைச்சதிற்கு பயன்படுத்தபடுகிறது. இபொழுது இயற்கை முறையில் எப்படி தழைச்சத்து நிறைந்த உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 லிட்டர் மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும்…
பருத்தியில் இயற்கை வேளாண்மை
பருத்தி இந்தியாவின் மிகவும் முக்கியமான இழைப்பயிர் ஆகும்.இது வேளாண்மை மற்றும் தொழில்துறை பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத பங்கினை வகிக்கிறது இது ஜவுளி தொழில்துறையின் முதுகெலும்பாக உள்ளது. கணக்கீட்டின் படி 70% நுகர்வு ஜவுளி துறையிலும் 30 சதவீதம் நாட்டின் ஏற்றுமதியிலும் உள்ளது. இதன் வர்த்தகம் ரூ.42,000 கோடிகளாகும்.இந்தியாவின் பருத்தி விவசாயம் 8.9 மில்லியன் ஹெக்டரில் நடைபெறுகிறது.…
பார்த்தீனியச் செடிகளை எளிய முறையில் இயற்கை உரமாக மாற்றலாம்
வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு பரவிய பார்த்தீனியம் களை, முதன்முதலாக 1956-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டது. தற்போது அனைவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் இந்த பார்த்தீனியம், திரும்பும் இடமெல்லாம் பெருகியுள்ளது. 11.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த களைச்செடியின் இலைகள் பார்ப்பதற்கு காரட் இலைகளைப் போன்று காணப்படுவதுடன் இவை கிளைவிட்டு பூக்கும் இனத்தைச் சார்ந்தவையாகும்.…