கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலப்போர்வை எனப்படும் “மல்ச்சிங்’ முறையை விவசாயிகள் கடைபிடித்தால், அதிக மகசூல் பெற முடியும். கோடை காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படுவது இயற்கையே. மின்வெட்டு மற்றும் தண்ணீர் பிரச்னையை விவசாயிகள் கட்டாயம் சமாளித்தாக வேண்டும். சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் நிலப்போர்வை…
வெங்காய சாகுபடியில் சாதனை படைக்கும் சிவில் இன்ஜினியர்
சிவில் இன்ஜினியராக இருந்து சாதிக்க முடியாததை, வெங்காய சாகுபடியில் சாதித்துள்ளார் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த வேல்ஆண்டவர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் வேல்ஆண்டவர். மதுரை தியாராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் 1987ல் சிவில் இன்ஜினியரிங் முடித்தார். இவ ருடன் படித்த பலரும் படிப்புக்கேற்ற வேலை, வருவாய்…
காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி
ஆடிப்பட்ட காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டியதின் அவசியத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முருகேசன் விளக்கம் அளித்துள்ளார். காய்கறி விதைகளை விதைக்கும் முன்னர் விதைநேர்த்தி செய்வது அவசியம். குறிப்பாக தக்காளி, கத்தரி, மிளகாய் பயிரிட உள்ளவர்கள் விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். காய்கறி பயிர்களை வேரழுகல்நோய், வாடல்…
தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை
தென்னையின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சலுக்கும் பேரூட்டகங்கள் மற்றும் நுண்ணூட்டகங்கள் பெரிதும் உதவுகின்றன. தென்னையில் காணப்படும் ஒவ்வொரு சத்துக்களின் குறைகளும் அதன் நிவர்த்திகளைப் பற்றியும் காண்போம். தழைச்சத்து : தென்னை மரத்தின் வளர்ச் சியை ஊக்குவிக்கின்றது. பெண் பூக்கள் உற்பத்தியாவதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது. இதன் பற்றாக்குறையால் தென்னை மரத்தின்…
பசுந்தாள் உரங்கள்
பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி ஆகியவை, காற்றில் உள்ள நைட்ரஜனை தன்னுள் நிலைநிறுத்தி, மண்ணின் வளத்தை மேம்படுத்தும். தக்கைப்பூண்டு மற்றும் கொழிஞ்சி பயிர்கள், நிலத்தின் அமில, காரத் தன்மையை நீக்கும் தன்மை கொண்டது. இவை மற்ற பயிர்களைப் போல, சான்று பெற்ற விதைகளாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால்,…
நுண்ணுயிர் உரங்கள் – நீலப்பச்சை பாசி
இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது. நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய…
இயற்கை எருக்கம் செடி உரம்
வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் விவசாய தேவைக்காக ‘எருக்கம் செடி’ அறுவரை தீவிரமாக தொடங்கியுள்ளது. விவசாயத்திற்கு பெயர் போன வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதியில் கடும் வறட்சிக்கு இடையேயும் விவசாய பணியை தொடங்கியுள்ளனர். செயற்கை உரங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்தாலும் அடிப்படையில் இயற்கை உரங்கள் தவிர்க்க முடியாததாகவே உள்ளன. அதற்கு ‘எருக்கம் செடி’ உரம் தான் விவசாயிகளின் பாரம்பரிய ‘சாய்ஸ்’.…
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை
மரவள்ளி ஒரு வறண்ட நில நீண்ட கால பயிராகும். இதை பயிரிடுவதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. மரவள்ளி சாகுபடி குறித்த தகவல்கள் பின்வருமாறு, மரவள்ளி சாகுபடி நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழவு செய்து, கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் அல்லது இரண்டு டன் மண்புழு உரம் இட வேண்டும்.…
தக்காளி விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை
தக்காளி நடவு செய்து வரும் விவசாயிகள் அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியை தெளிக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தக்காளி நாற்று நடவு செய்வதற்கு முன்பு, பாத்திகளில் உள்ள தக்காளி நாற்றுகளை எடுத்து, ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பேக்டீரியாவை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில், வேர்பகுதியை நனைத்து,…
வீட்டுத் தோட்டத்தைப் பாதுகாப்பது எப்படி?
வீட்டுத் தோட்டங்களைப் பராமரிப்பது என்பது தனிக் கலை. காலையில் எழுந்து செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் பராமரிப்பு அல்ல. செடிகள் காயாமலும் வதங்காமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். பூச்சு தொற்று ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். இதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. இதுபற்றி வழிகாட்டுகிறார் தோட்டக்கலை வல்லுனர் அந்தோணி ராஜ். தொற்று தவிர்க்க.. ‘’தோட்டத்தில் உள்ள செடிகளைக்…