சிவில் இன்ஜினியராக இருந்து சாதிக்க முடியாததை, வெங்காய சாகுபடியில் சாதித்துள்ளார் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த வேல்ஆண்டவர்.
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் வேல்ஆண்டவர். மதுரை தியாராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் 1987ல் சிவில் இன்ஜினியரிங் முடித்தார்.
- இவ ருடன் படித்த பலரும் படிப்புக்கேற்ற வேலை, வருவாய் தேடி வெளியூர், வெளிநாடு சென்றபோது, இவர் மட்டும் விவசாயத்தில் நாட்டம் செலுத்தினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெங்காய சாகுபடியில் அதிக நாட்டம் செலுத்தி வரும் இவர், இதில் விவசாயிகளுக்கு நஷ்டம் வர வாய்ப்பே இல்லை, என்கிறார்.
- தோட்டக்கலை, விவசாயத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், தனது நிலத்தில் சொட்டு நீர்ப் பாசன முறையை நடைமுறைப்படுத்தி உள்ளார்.
- வெங்காய நடவுக்கு மட்டமான பாத்தி, உயரமான பாத்தி முறையில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
- உயர பாத்திக்கு நவீன உபகரணங்கள் தேவைப்படும். இதனால் மட்டமான பாத்தியை பலரும் தேர்வு செய்வர்.
- உயரமான பாத்தியில் நடவு செய்தால், அடைமழை பெய்தாலும், பாத்திகளில் நீர் தேங்காமல் வடிந்து விடும்.
- இதனால் பயிருக்கு பாதிப்பு ஏற்படாது.
- ஆண்டிபட்டி பகுதியில் அடை மழைக்கு வாய்ப்பு குறைவு என்பதுடன், இப்பகுதியில் வீசும் காற்று வெங்காய சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது.
- மட்டமான பாத்தி அமைத்து, நான்கு விரல்கடை நீளவாக்கிலும், அகலம் முக்கால் அடியிலான பாத்தியின் நடுப்பகுதியில் சொட்டு நீர்ப் பாசன குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
- சொட்டு நீர்ப் பாசன முறையில், உரங்களை குழாய் மூலம் அனுப்பி விடுவதால் உரச்செலவு மிச்சமாவதுடன், சீராக அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும்.
- நடவுக்கு முன்பு நிலங்களை பண்படுத்த, ஆட்டுக்கிடை அமைப்பதுடன், இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துகிறார்.
வெங்காய சாகுபடியின் சாதனை குறித்து வேல்ஆண்டவர் கூறியதாவது:
- குறுகிய காலப் பயிரான வெங்காய சாகுபடிக்கு 70 நாட்கள் போதுமானது.
- காற்று, வெயில், மழை காலத்தை கணக்கில் கொண்டு, நடவு காலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- டிசம்பரில் நடவு செய்தால் மார்ச் மாதம் அறுவடைக்கு சாதகமாக இருக்கும்.
- கடும் கோடையான ஏப்ரல், மே மாதத்தில் நிலத்தை ஆறவிட்டு, ஜூனில் நடவு செய்தால், செப்டம்பரில் வெங்காயம் எடுக்க சாதகமாக இருக்கும்.
- வெங்காய சாகுபடியில், நிலத்தை பலமுறை உழவு செய்து, பண்படுத்துவது முக்கியம்.
- பராமரிப்பு செலவு, நோய் தாக்கம் குறைவுதான். காய்கறி சாகுபடியில் ஆண்டு முழுவதும் அறுவடை இருக்கும். வெங்காய அறுவடைக்கு மூன்றுநாட்கள் போதும்.
- சொட்டு நீர் பாசனத்தால் 60 சதவீதம் நீர் மிச்சமாகும்.
- விவசாயிகள் பலரும் விதை வெங் காயத்திற்கு கூடுதல் செலவிடுவர். விதை வெங்காயத்திற்கான செலவை குறைக்க, தரை பன்றை முறையில் விதை வெங்காயத்தை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். எங்களுக்கு தேவையான விதை வெங்காயத்தை எப்போதும் இருப்பில் வைத்து பராமரிப்பு செய்கிறோம்.
- வெங்காய சாகுபடியில் நஷ்டம் என்கிறார்கள். திட்டமிட்டு, தொழில் நுணுக்கத்துடன் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, எந்த பாதிப்பும் இல்லை.
- ஒரு ஏக்கர் நிலம் இருந்தாலும், ஒரு முறை வெங்காய சாகுபடியில் லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.
- பாலக்கோம்பை பகுதியில் விவசாயத்திற்கு தேவையான வளமான மண், ஓரளவு நீர் இருப்பு இருந்தாலும், விவசாயத்தில் இயற்கை ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு தெரிவித்தார்.
இவருடன் பேச: 08939990000