தமிழ்நாடு மாநில அரசின் திட்டங்கள்
1 தென்னங்கன்றுகளை வழங்குதல்
1) நெட்டை கன்றுகளை வழங்குதல் – ரூ.15/கன்று
2) நெட்டை x குட்டை கன்றுகளை வழங்குதல் – ரூ.25/கன்று
3) குட்டை x நெட்டை கன்றுகளை வழங்குதல் – ரூ.75/கன்று
பயன் பெறுவதற்கான தகுதி: மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் (நீலகிரி மாவட்டம் தவிர) தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.
அணுகவேண்டிய அதிகாரி
- கிராம அளவிலான துணை வேளாண் அலுவலர்
- வட்ட அளவிலான வேளாண் அலுவலர்
- வட்ட அளவிலான துணை வேளாண் இயக்குநர்
- மாவட்ட அளவிலான இணை வேளாண் இயக்குநர்
2 தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி மற்றும் வழங்குதலை வலுப்படுத்துதல்
தென்னங்கன்றுகள் வழங்குதல்
- நெட்டை இரகங்கள் வழங்குதல் – ரூ.7.50/கன்று
- வீரிய ஒட்டு ரகம் வழங்குதல் – ரூ.15/கன்று
பயன்பெறுவதற்கான தகுதி: சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர, அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது.
3 தென்னையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான ஒருங்கிணைந்த பண்ணை முறை
1. செயல் விளக்கப் பண்ணை அமைத்தல் – ரூ.35,000 கொடுக்கப்படும். செயல் விளக்க பண்ணை அமைப்பதற்கு இரு தவணையாக ரூ.17,500/எக்டர்/வருடம் கொடுக்கப்படும்.
2. நோய்வாய்ப்பட்ட தென்னை மரங்களுக்கு மேலாண்மை – நோய் தாக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்றுவதற்காக ரூ.250 வேளாண் துறை அலுவலகம் வாயிலாக மானியம் தரப்படும்.
3. எரு மக்கு குழி – ஒரு எரு மக்கு குழி அமைக்க ரூ.20,000 வழங்கப்படும்.
4. தென்னைக்கான குழு பயிற்சி – பல வகை
மதிப்பூட்டிய பொருட்களான தேங்காய் சிப்ஸ். வினிகர், போன்றவற்றை உற்பத்தி செய்ய பயிற்சி வழங்குதல். ஒரு பயிற்சிக்கு 20 விவசாயிகள் கொண்ட குழுவிற்கு ரூ.5000 வழங்கப்படும். (ஒரு குழுவிற்கு – 15-20 விவசாயிகள்/பண்ணை மகளிர்)
பயன் பெறுவதற்கான தகுதி: சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்ட விவசாயிகளும் பயன்பெறலாம்.
அணுகவேண்டிய அலுவலர்கள்
- கிராம அளவில் துணை வேளாண் அலுவலர்
- வட்ட அளவிலான இணை வேளாண் அலுவலர் / வேளாண் அலுவலர்
- வட்ட அளவிலான துணை வேளாண் இயக்குநர்
- மாவட்ட அளவிலான இணை வேளாண் இயக்குநர்
4 நுண்ணுாட்ட கலவை வழங்குதல்
ஒரு கிலோ தென்னை மரங்களுக்கான நுண்ணுாட்ட கலவையை ரூ.41.20 –க்கு வழங்குதல்
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
- கிராம அளவிலான துணை வேளாண் அலுவலர்
- வட்ட அளவிலான இணை வேளாண் அலுவலர்/வேளாண் அலுவலர்
- வட்ட அளவிலான துணை வேளாண் இயக்குநர்
5 பயிர் பாதுகாப்பு முறைகளை கையாளுவதற்கான உதவியளித்தல்
1) தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த, பச்சை மஸ்கார்டை அழுகல் பூஞ்சாணம் வழங்குதல். ஒரு எக்டருக்கு 1 டியூபை இலவசமாக வழங்குதல்
2) தென்னையில் கருந்தலைக் கம்பளி புழுவை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகளை வழங்குதல் ரூ.35 சேவை செலவுக்கு வழங்குதல்
பயன் பெறுவதற்கான தகுதி: சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் பயன்பெறலாம்.
மத்திய அரசின் திட்டங்கள்
1. தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்கள்
1.1 நடவு கன்றுகள் உற்பத்தி செய்து வழங்குதல்
கீழ்வரும் திட்டங்கள் மூலமாக தரமான விதை கன்றுகளை உற்பத்தி செய்து வழங்குதல்
- எட்டு செய்விளக்கம் மற்றும் விதை உற்பத்தி பண்ணைகளை உருவாக்குதல்
- விதை உற்பத்தி பண்ணைகளுடன், நாற்றங்கால் பண்ணைகளை உருவாக்குதல்
- பதிவுசெய்யப்பட்ட/தனியார்/அங்கீகரிக்கப்பட்ட தென்னை நாற்றங்கால்களுக்கு உதவுதல்
- மண்டல தென்னை நாற்றங்கால் பண்ணை அமைத்தல்
- தனியார்/பதிவுசெய்யப்பட்ட/கூட்டுறவு சங்க நிறுவனங்கள் கருவிதை தோப்பு அமைக்க உதவுதல்
அணுக வேண்டிய முகவரி:
தென்னை வளர்ச்சி வாரியம், கெராபவன், SRHS ரோடு,
கொச்சி, கேரளா – 682011
தொலைபேசி: 91-484-2376265, 2377267, 2376553
தொலைநகலி: 91-484-2377902
மின்அஞ்சல் : cdbkochi@dataone.in, cdbkochi@gmail.com
மேலும் விபரங்களுக்கு: www.coconutboard.nic.in
1.2 தென்னை சாகுபடிக்கான பரப்பளவை அதிகரித்தல்
- நல்ல திறன் பெற்ற நிலங்களில், தென்னை சாகுபடி செய்து, சாகுபடி பரப்பளவை அதிகரித்து நாட்டின் உற்பத்தி திறனை பெருக்குதல்
- புதிய நடவு உதவித் தொகையாக ரூ.8000/எக்டர் வழங்குதல் (தவணை முறையில் இரண்டு தடவை வழங்குதல்)
- மாநில/யூனியன் பிரதேச வேளாண்மை/ தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் வாயிலாக தென்னை வளர்ச்சி வாரியம், தனது திட்டங்களை அமல்படுத்துகிறது.
- தென்னை வளர்ச்சி வாரியம், விண்ணப்ப படிவங்களை, திட்ட அமலாக்க அலுவலகங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு வழங்குகிறது.
- விண்ணப்பங்களை ஆராய்ந்து தகுதியான விவசாயிகளுக்கு, மானியம்/உதவித் தொகையை காசோலை அல்லது வரவோலை மூலமாக அந்தந்த திட்ட அமலாக்க அலுவலகங்கள் வழியாக வழங்குகிறது.
1.3 ஒருங்கிணைந்த பண்ணையம் மூலமாக உற்பத்தியை பெருக்குதல்
தென்னந்தோப்புகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை ஒருங்கிணைந்த வழிமுறைகள் மூலமாக பெருக்குதல் கீழ்கண்ட திட்டங்கள் வாயிலாக கூடுதல் நிகர லாபம் பெருதல்
1. நோய் வாய்ப்பட்ட தென்னை மரங்களை நிர்வாகித்தல்: தஞ்சாவூர் வாடல், தத்திபாக்கா நோய் உள்ள மரங்களை அகற்ற ரூ.250 ஊக்கத்தொகை வழங்குதல்
2. செயல்முறை விளக்கப் பண்ணைகள் அமைத்தல்: நோய்வாய்ப்பட்ட தோப்புகளில், ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை கையாளுவதற்கு, நிதியுதவியாக ரூ.35000/ எக்டர் வழங்குதல் (ஒரு வருடத்தில் இரு தவணைகளில் வழங்கப்படும்).
நோய் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த ஊக்குவித்தல்
3. மக்கும் குப்பை குழிகள் அமைக்க உதவுதல் :
- தென்னந்தோப்புகளில், மண்புழு உரம், தென்னை நார்க் கழிவு, மக்கிய குப்பை, தொழு உரம் போன்ற இயற்கை வழி உரங்கள் இட ஊக்குவித்தல்
- மக்கும் குப்பை குழி அமைப்பதற்கான செலவில் 50% மானியம், அல்லது குழி ஒன்றுக்கு ரூபாய் 20000 நிதியுதவி அளித்தல்
1.4 தொழில் நுட்ப செயல் விளக்கம்
- முன்னோடி திட்டங்களான ஒருங்கிணைந்த தேங்காய் பதனிடும் தொழில்களுக்கான கட்டமைப்புகள்/ இயந்திரங்கள்/ கருவிகளுக்கான செலவில் 50% மானியம் அளித்தல்
- தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கு உதவுதல்
- தென்னை சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க கட்டிடங்கள்/ இயந்திரங்கள்/கருவிகளுக்கான செலவில் 25% மானியம் அல்லது ரூ.2.50 லட்சம் அளித்தல் (எந்த தொகை குறைவோ, அது வழங்கப்படும்).
- தேங்காய் பதப்படுத்தும் ஆலைகளில், அக்மார்க்/ ISO தரச் சான்றுக்கான ஆய்வுக் கூடங்கள் அமைக்க நிதியுதவி அளித்தல். இதற்கு ஆகும் செலவில் 25% மானியம் அல்லது ரூ 1 லட்சம் எது குறைவோ அந்த தொகையை அளித்தல்
- தென்னை பதப்படுத்துதல்/சாகுபடி/பயிர் பாதுகாப்பு இயந்திரங்கள்/கருவிகள் உருவாக்க மானியம் அளித்தல். செலவுத் தொகையில் 25% மானியம் அல்லது ரூ 5 லட்சம், எது குறைவோ அது வழங்கப்படும்.
- உடன்விளை பொருள் பயன்பாடு மற்றும் பலவகைப்பட்ட பொருட்கள் உற்பத்தி பற்றிய தொழில்நுட்ப-பொருளாதார ஆய்வு மேற்கொள்ளுதல்
- உற்பத்தி, பதப்படுத்துல் மற்றும் விற்பனைக்கான ஆலோசனைகள் வழங்குதல்
1.5 விற்பனை மேம்பாடு மற்றும் புள்ளியியல்
- விற்பனைத் தகவல் மற்றும் அறிவாண்மை சேவை
- மேம்படுத்தப்பட்ட கொப்பரை உலத்தி மற்றும் பிற பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கி தேங்காய் பதப்படுத்துதலை நவீனப்படுத்துதல். இதற்கு ஆகும் செலவில் 25% மானியம் அல்லது ரு.10,000, எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும்
- விபரங்களை சேகரித்து, ஆராய்ந்து மதிப்பீடு செய்தல்
1.6 தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- பல்வேறு மொழிகளில், நிதியுதவி பற்றிய செய்திகளை மாநில அரசு மற்றும் பல்கலைக்கழங்கள் பிரசுரித்து வெளியிட வழங்குதல்
- நிதியுதவி மற்றும் பிற செய்திகளை, திரைப்படமாக தயாரித்து, மாநில அரசு பல்கலைக்கழகங்களும் திரையிடுவதற்கு வழங்குதல்
- பொருட்காட்சி / கண்காட்சிகளில் பங்கேற்றல்
- கருத்தரங்கு மற்றும் பணிமனைக் கூட்டங்கள் நடத்துதல்
- சிறந்த விவசாயிகள், கைவினையாளர்கள், தொழில் நிபுனர்கள், பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்குதல்
- அறுவடை மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல்
- நவீன முறையில் சாகுபடி செய்யவும், பின் செய்தி நேர்த்திகன் மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல்
- தென்னை சார்ந்த கைவினைப்பொருட்கள் உற்பத்திக்கு பயிற்சி அளித்தல்
- சிறந்த தேங்காய் பொருள்/இயந்திரம்/கருவி உருவாக்கும் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு தேசிய விருது வழங்குதல்
- தேசிய தகவல் மையம் மற்றும் மின்தரவு சுத்தி அமைப்பு நிறுவுதல்
மனித வள மேம்பாடு
- நிர்வாகம் மற்றும் மேற்பார்வைத் திறனை மேம்படுத்த பயிற்சி வழங்குதல்
- தொழில் நுட்பங்களை புரிந்து கொள்ளவும் செயல்படுத்தவும் பயிற்சி அளித்தல்
தென்னையில் தொழில்நுட்ப சேவை – தொழில் நுட்ப சேவையின் கீழ் நிதியுதவி
- தேங்காய் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைத்து, மதிப்பூட்டிய பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான திட்ட செலவில் 25% நிதியுதவி (அதிக பட்சம் 50 லட்சம்) வழங்குதல். (கடன் திரும்ப செலுத்தியவுடன் மானியம் வழங்கப்படும்)
- தேங்காய் பொருட்கள் விற்பனையை, மேம்படுத்த, தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துதல்/கருத்தரங்குகளில் பங்கேற்றல், நவீன விற்பனை கூடங்களில் காட்சி பொருளாக வைக்க இடங்களை வாடகைக்கு எடுத்தல், கவர்ச்சியான அட்டைகளில் பெட்டியிடுதல் போன்றவற்றிக்கு நிதியுதவி அளித்தல்
- திட்டத்தின் செலவுத் தொகையில், 50% தொகையை தனிநபருக்கு 10 லட்சம் வரையிலும், கூட்டுறவு நிறுவனங்களுக்கு 25 லட்சம் வரையிலும் வழங்குதல்
- ஆர்வமுள்ள தொழில் முனைவோர் தங்களது திட்ட அறிக்கைகளை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்துடன் சேர்த்து, தலைவர், தென்னை வளர்ச்சி வாரியம், கேர பவன், கொச்சின் 682 011 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.
2 தென்னை நார் வாரியம்
தென்னை நார் தொழிலை, புதுப்பித்து நவீனப்படுத்தி, தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல் (2007-08 முதல் 2011-12 வரை)
திட்டத்தின் நோக்கங்கள்
1) உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலில் நவீன தொழில் நுட்பங்களை கையாண்டு தென்னை நார் தொழிலை ஸ்பின்னிங் மற்றும் நுாற்றல் துறைகளை மேம்படுத்துதல்
2) உற்பத்தி திறன் மற்றும் தரத்தை உயர்த்த உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துதல்
3) தென்னை நார் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில், கிராம புறங்களில், வேலை வாய்ப்பு உருவாக்குதல்.
4) கிராமபுற மகளிருக்கு நிறைய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, மகளிரை உயர்த்துதல்
முதன்மை நிறுவனம்
தென்னை நார் வாரியம், தென்னை நார் வளாகம், கொச்சி – 682 016
திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் : தகுதி அடிப்படையில் தேர்வு மற்றும் முதல் வந்தோருக்கு முதல் சேவை என்ற அடிப்படையிலும் தேர்வு செய்யப்படும்.
ஏற்கனவே நுால் நுாற்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் சுய உதவிக் குழுக்களுக்கும் புதிய சுயஉதவி குழுக்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் சுய உதவி குழுக்கள் குறைந்த பட்சம் 2 சென்ட் நிலமேனும் சொந்தமாகவோ/குத்தகைக்கோ குறைந்தது 10 வருடம் வைத்திருக்க வேண்டும். இதற்கான நிருபனச் சான்றை நிதியுதவிக்கான விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து சமர்பிக்க வேண்டும்.
3 பழமைவாய்ந்த தொழிற்சாலை புதுப்பிப்பதற்கான நிதியுதவித் திட்டம்
2005-06 இல் துவங்கப்பட்டு, நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் 5 வருட காலத்திற்கு மேல் இயங்கி வரும் பழைய தொழில் சாலைகளை மேம்படுத்துதல்.
‘புதிய பாரம்பரிய திறன்கள், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள், நவீன செயல்முறைகள், விற்பனை அறிவாண்மை புதிய பொது தனியார் கூட்டுத்தொழில் வடிவங்கள் உருவாக்குதல்.
திட்ட இலக்கு துறைகள் மற்றும் தகுதி பெற்ற பயனாளிகள்
- கைவினைத் திறனாளிகள், உழைப்பாளிகள், இயந்திரம் செய்வோர், மூலப்பொருள் வழங்குவோர் தொழில் முனைவோர், தனியார் மற்றும் நிறுவனம் மூலம் தொழில் மேம்பாட்டு சேவை அளிக்க பாரம்பரிய தொழிற்சாலைகள் மற்றும் காதி, தேங்காய் நார் மற்றும் கிராமப்புற தொழில்களில் (தோல் மற்றும் மண்பாண்டம்) ஈடுபட்டுள்ளோர்.
- கைவினைத் தொழில் சங்கம், கூட்டுறவு சங்கங்கள், கூட்டமைப்புகள், தொழில் முனைவோர் இணைப்பு, சுய உதவி குழுக்கள், தொழில் முனைவோர் சங்கங்கள்.
- பழைய தொழிற்சாலைகளில் திட்டங்களை அமல்படுத்தும் நிறுவனங்கள், அரசாங்க/நிறுவனங்களின் திட்டங்களை பண்ணை அளவில் செயல்படுத்துவோர், கொள்கை தயாரிப்பாளர்கள் போன்றோர்.
திட்ட நிறுவனங்கள்
(1) காதி மற்றும் கிராமபுற தொழில் குழு
(2) தென்னை நார் வாரியம்
(3) பிரவுன் நார் துறையின் நிதியுதவி திட்டத்தை தென்னை நார் தொழிலுக்கு நீட்டிப்பு செய்தல
திட்ட நிபந்தனைகள்
- இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் தென்னை நார் நிறுவனங்கள், தென்னை நார் சட்டம் 1958 யின் படி தென்னை நார் வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். நிறுவனம் அமைந்துள்ள மாநில தொழிற்சாலைத் துறையிலும் பதிந்திருக்க வேண்டும்.
- தென்னை நார் பிரித்தெடுத்தல்/தென்னை நார் நுாலை நுாற்கும், தொழிற்சாலைகளை, தென்னை நார் மற்றும் தேங்காய் மட்டை அதிகமாக இருக்கும் இடங்களில் அமைக்க வேண்டும்.
- கயிறு, பாய் மட்டும் வீட்டு உபயோக மிதியடிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் தவிர, பிற தென்னை நார் பிரித்தெடுக்கும் நிறுவன தேவைகளுக்கு மூன்று பேஸ் வசதி தேவை
- நிதியுதவிக்காக கொடுக்கும் விண்ணப்ப படிவத்தை, நிறுவனம் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தின், பொது மேலாளர் அங்கீகாரத்துடன் அளிக்க வேண்டும்.
- தென்னை நார் வாரியம் பரிந்துரை செய்துள்ள வடிவத்தில் தொழில் கூடங்கள் இருக்க வேண்டும்.
- தென்னை நாரில் பலவகைப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய அதிகபட்சமாக ரூ.5 லட்சம், வரை வழங்கப்படும்.
- தென்னை நார், நாரின் நுால், நார் மிதியடிகள் போன்ற பலதரப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு, அந்தந்த பொருட்களுக்கான நிதியுதவி தனித்தனியாக வழங்கப்படும்.
- இயந்திரங்கள்/கருவிகளின் உற்பத்தி செய்ய தேவைப்படும் பாகங்களுக்கு ஆகும் உத்தேசமான செலவை கணக்கிட்டு, தென்னை வாரியம் இயந்திரங்களுக்கான உச்ச வரம்பு தொகையை நிர்ணயம் செய்கிறது.
சிறப்பு அம்சங்கள்
1) கூட்டுறவு அமைப்பினுள் இல்லாத வெளியே உள்ள மிதியடி மற்றும் பாய் நிறுவனங்களும் இத்திட்ட நிதியுதவி பலனை பெறலாம்.
2) மேற்குறிப்பிடப்பட்டுள்ள உச்ச வரம்பின்படி 25% நிதியுதவி வழங்கப்படும்.
3) இத்திட்டத்தின் மானியம், பிற மத்திய மானியம் திட்டங்களுடன் சேர்க்கப்படும்.
4 விற்பனை மேம்பாட்டிற்கான நிதியுதவித் திட்டம்
தென்னை நார் பொருள் தயாரிப்பாளர்கள்/உற்பத்தியாளர்களிடம் தேங்கிக் கிடக்கும் பொருட்களை குறைக்கும் நோக்கத்துடன், தென்னை நார் வாரியம், அமைச்சகத்துடன் இணைந்து தள்ளுபடி திட்டங்களை இயக்கியது. தென்னை நார் பொருட்களுக்கு சர்வதேச விற்பனையை சந்தையை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.
இத்தள்ளுபடி திட்டம் 1986-87 இல் 23 இருந்து 1999-2000 வரை இயங்கியது.
திட்டத்தின் நோக்கங்கள்
1) கூட்டுறவு தொழிற்சாலைகள்/பொது துறை தொழில் நிறுவனங்கள் குறைந்த கூலி கொடுத்து உற்பத்தி செய்யும் தென்னை நார் மற்றும் தென்னைநார் பொருட்களின் விற்பனையை மேம்படுத்துதல். இதன் மூலம் நிலையான உற்பத்தி மற்றும் நல்ல வேலைவாய்ப்புகளை பெறுதல்
2) தென்னை நாரில் விற்பனை வளர்ச்சியில் ஈடுபடும் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை தொழில் நிறுவனங்களுக்கு, நிதியுதவி அளித்தல் ( தொடர்ச்சியாக)
3) இந்த திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களின் பொது நிறுவனமான மத்திய தொடங்க கூட்டுறவு சங்கங்கள், 8 வருடத்திற்கான நிதியுதவியை பெற்றுள்ளது ( 2000-1 முதல் 2007-08 வரை)
நிதியுதவி பெறக்கூடிய நிறுவனங்கள்: முதன்மை கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு சங்கங்கள், பொது துறை சங்கங்கள், விற்பனை டிப்போ மற்றும் விற்பனைக் கூடங்களுக்கு திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.
உதவி தொகையை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
1) விளம்பரம் செய்தல்
2) புதிய விற்பனைக் கூடங்கள் அமைத்தல்
3) பழைய விற்பனை மையங்களை புதுப்பித்தல்
4) விற்பனை ஆய்வு
5) விற்பனை அறிவாண்மை வலைதளம் அமைத்தல், கணிப்பொறி பொருத்துதல் கணிப்பொறி வடிவமைப்பு மற்றும் படம் வரைதல், தரமிக்க வடிவமைப்பாளர்களை நிறுவுதல், மின் வணிக வசதிகள், விற்பனைக் கூடங்களை கணினிமயமாக்குதல் போன்றவற்றிற்கு நிதியுதவி.
6) சேமிப்புக் கிடங்கு அமைத்தல்
7) புதிய நவீன வேளாண் யுக்திகளை கையாளுதல், (தள்ளுபடி விற்பனை) இத்திட்டத்தை 11 ஆம் ஐந்தாண்டு திட்டத்திற்கு நீட்டிப்பு செய்ய தென்னை நார் வாரியம், அமைச்சகத்தின் பரிந்துரையுடன் இந்திய அரசுக்கு சமர்பித்துள்ளது. (2007-08 முதல் 2011-12)
5 விற்பனை மேம்பாட்டு உதவித் திட்டம் (ஏற்றுமதி)
இந்திய அரசு, ஏற்றுமதியை உயர்த்துவதில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய பெரும் பொருளாதார சூழ்நிலையின் படி ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அரசின் ஏற்றுமதி தொழிலை ஊக்குவித்து, பல்வகைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை மேம்பாடு உதவித திட்டம் வணிகத் துறையின் வாயிலாக கீழ் கண்ட செயல்பாடுகளுக்கு உதவி வருகிறது.
1) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு உதவுதல்
2) ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள் தங்களது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க ஊக்குவித்தல்
3) வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதி முன்னேற்ற திட்டங்களுக்கு போகஸ் (LAC) போகஸ் (ஆப்பிரிக்கா), போகஸ் (CIS) மற்றும் போகஸ் (ஏசியன் +2) உதவுதல்
4) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளும், அவசியமான எஞ்சிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்களுக்கு உதவுதல்
- ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், நிர்வாகம் சம்பந்தமாக, சுயமாக தன்னாட்சி நடத்தி வருவதால், நிர்வாக செலவுக்கு எந்த நிதியுதவியும் வழங்கப்படுவதில்லை.
- ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்திற்கான வரவு செலவுத் திட்டம் வழங்கப்படும்.
- தனது செயல்பாடுகளுக்கும், தனிநபர் ஏற்றுமதி உரிமைக்கான தொகையை அளிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
- குறிப்பிட்ட பொருட்களை வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்ய உரிய திட்டங்கள் தீட்டி ஏற்றுமதி முன்னேற்ற செயல்பாடுகளை மேற்கொள்ளுதல். கணினி ஆய்வுகள், ஏற்றுமதி திறன் பற்றிய வெளியீடுகளின் கண்டுபிடிப்புகள், தென்னை நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் போன்றவற்றைக் கொண்டு ஏற்றுமதிக்கான செயல் திட்டங்கள் தீட்டுதல்
மண்டல மைய திட்டங்கள்: தற்பொழுது 4 மண்டல மையத் திட்டங்கள் போகஸ் (LAC). போகஸ் (ஆப்பிரிக்கா) போகஸ் (CIS) போகஸ் (ஏசியன் +2) துறையின் செயல்பாட்டில் இயங்கி வருகிறது.
வெளிப்புற விற்பனை மேம்பாட்டு நிதியுதவித் திட்டம் (2007-08 முதல் 2010-11 வரை)
திட்டம் பற்றி: வர்த்தகம் பற்றி அனைவருக்கும் தெரிந்தது தான். தென்னை வாரியம், குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தன் அங்கீகாரத்துடன் வணிகம் செய்கிறது.
தற்போதைய ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் (2007-08 முதல் 2010-11 வரை) இந்திய அரசு பல ஏற்றுமதி முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நிதியுதவி திட்டத்தின் கீழ் வரும் செயல்கள்
- விற்பனையாளர்/வாங்குவோர் கூட்டம், வர்த்தக குழு/விற்பனை மற்றும் ஆய்வுக்கான வெளிநாட்டுப் பயணம் போன்வற்றை நடத்துதல் மற்றும் பங்கேற்றல்
- வெளிநாடுகளில் நடைபெறும் வாணிப சந்தை மற்றும் பொருட்காட்சிகளில் பங்கேற்றல்
- அச்சிடப்பட்ட பொருட்கள் மூலமாக விளம்பரம் செய்தல்
தகுதி: முந்தைய வருடத்தில், தென்னை நார் மற்றும் நார் பொருட்களின் விற்பனை அளவு ரூ 2 கோடிக்கு கீழ் உள்ள அனைத்து ஏற்றுமதியாளர்கள், தென்னை நார் வாரியத்தில் பதிவு செய்த தென்னை நார் மற்றும் நார் பொருட்கள் உற்பத்தியாளர்கள், இத்திட்டத்தின் சலுகைக்கு தகுதி பெற்றவர்கள் ஆவர்.
6 ஜெனரேட்டர் செட்/டீசல் எஞ்சின்-க்கு நிதியுதவி அளிக்க திட்டத்தை நீட்டிப்பு செய்தல்
நோக்கம்: மின் துண்டிப்பு/மின் பற்றாக்குறை போன்ற தருணங்களில் உற்பத்தி பாதிக்காமல் இருக்க தென்னை நார் மற்றும் சுருண்ட தென்னை நார் உற்பத்தி கூடங்களுக்கு ஒரு முறை மானியம் அளிக்கப்படும். இதனால் தென்னை நார் பொருட்கள், நுால், மிதியடி, பாய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு தாமதமின்றி மூலப்பொருள் கிடைக்கிறது.
தகுதி:
1) தென்னை நார் தொழில் சட்டம் 1958 இன்படி தென்னை வாரியத்தில் செல்லத்தக்க வகையில் அமைப்பு பதிவு செய்திருக்க வேண்டும்.
2) சலுகை பெற உள்ள அமைப்பு, மாநில தொழிற்சாலைத் துறையின் கீழ், இறுதியாக SSI பதிவு செய்திருக்க வேண்டும்.
3) ஜெனரேட்டர் நிறுவ எந்த தடையும் இல்லை என்று, மாநில சட்டத்தின் படி மாநில மின்சார வாரியத்திடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4) பதிவு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள படி, அமைப்பின் தேவைக்கேற்ப ஜெனரேட்டரின் திறன் இருக்க வேண்டும்.
5) அமைப்பிற்கு மூன்று பேஸ் மின் வினியோகம் இருக்க வேண்டும்.
7 மகிலா காயர் யோஜனா
- தென்னை நார் உற்பத்தி செய்யும் இடங்களில், கிராமப்புற மகளிருக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
- தென்னை நார் நுால் நுாற்பதற்கு பெண் தொழிலாளிகளுக்கு மின் இயக்க இராட்டைகளும் பழைய கைராட்டைகளும் வழங்கப்படும்.
- தென்னை நார் வாரியத்தின் பயிற்சி வகுப்புகள் மூலமாக பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
நிதியுதவி ஆதாரம்: மின் இயக்க இராட்டைகளின் விலையில் 75% தொகையை தென்னை நார் வாரியம், ஒரு தடவையில் மானியமாக வழங்குகிறது. மீதம் உள்ள 25% தொகையை பயனாளிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்/நிதி நிறுவனங்கள் மூலமாகவோ தாமாகவோ செலுத்த வேண்டும்.
மகிலா காயர் யோஜனா மூலம் அளிக்கப்படும் நிதியுதவியை நீட்டிப்பு செய்வதற்கான விதிமுறைகள் :
- மானியத்தின் மூலமாக வாங்கப்பட்ட மின் இயக்க இராட்டைகள், தென்னை நார் வாரியம் பரிந்துரை செய்துள்ள அளவுகளில் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மின் இயக்க இராட்டை வழங்கப்படும்.
- வணிக ரீதியாக உற்பத்தி செய்யத் தொடங்க 30 நாட்களுக்குள், தென்னை நார் சட்டம் 1950 இன் படி, பயனாளி தனது நுாற்பு அமைப்பை பதிவு செய்ய வேண்டும்.
- மின் இயக்க இராட்டைகள்/பழமையான மின் இயக்க இராட்டைகள் பயன்படுத்தும் பகுதிகளில் 1 பேஸ் மின் வினியோகம் இருக்க வேண்டும்.
- இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளி கொச்சின், தென்னை நார் வாரியத்துடன் பத்திர உடன்படிக்கை செய்ய வேண்டும்.
இத்திட்டத்தை அமல்படுத்தும் தென்னை நார் வாரிய அலுவலகங்களின் முகவரி:
புதுப்பித்தல், நவீனமயமாக்குதல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் தென்னை நார் வாரியம் தென்னை நார் வீடு(மனை), எம்.ஜி ரோடு கொச்சி 682016 தொலைபேசி: 0484 2351807, 0484 – 2373327 |
|
அலுவலகங்கள்
|
|
2. விரிவாக்கப் பணி அலுவலர் தென்னை நார் திட்ட அலுவலகம், தென்னை நார் வாரியம், தென்னை நார் புதிய வடிவ மிதியடி மற்றும் மிதியடி கூட்டுறவு சங்கக் கட்டிட வளாகம் ஆலப்பி தொலைபேசி: 0477-2245325 |
7. மண்டல அலுவலர் தென்னை நார் வாரியம், மண்டல அலுவலகம், ஜகமாரா(உத்யோக்பூரி) போஸ்ட், காந்தகிரி,புவனேஸ்வர் – 751 030, தொலைபேசி: 0674-2350078 |
3. மண்டல அலுவலர் தென்னை நார் வாரியம், மண்டல அலுவலகம், ராஜா நிலையம், மீல சோவா, கன்னூர் தொலைபேசி: 0497-2729180) |
8. அலுவர் மண்டல உதவி அலுவலகம், தென்னை நார் வாரியம், ஹேமந்தபாசுபவன், 4 வது மாடி, கல்கத்தா – 700 001 |
4. மண்டல அலுவலர் தென்னை நார் வாரியம், மண்டல அலுவலகம், நம்பர் 5, அழகப்பா லேஅவுட், வெங்கடேச காலனி, பொள்ளாச்சி – 642001, தமிழ்நாடு தொலைபேசி: 04259-222450 |
9. அலுவர்: தென்னை நார் வாரியம் மண்டல உதவி அலுவலகம், அஸ்யாம் சிறு தொழிற்சாலை மேம்பாட்டு வளாகம், பாமுனி மைடான், குவாகதி – 781021 தொலைபேசி: 0361-2556828. |
5. மண்டல அலுவலர் தென்னை நார் வாரியம், மண்டல அலுவலகம், நம்பர்8, அன்னெக்ஸ் கட்டிடம் கன்னிங்கம் ரோடு, பெங்களூர் – 560052 தொலைபேசி: 080-22268538 |
10. விரிவாக்கப் பணி அலுவலர் தென்னை நார் ஆராய்ச்சி மற்றும் விரிசாக்க மையம் கதவு எண்: 40 கிஷா முத்தாரம்மன் கோவில், ஆர்.டி. அலுவலகம் அருகில், தென்காசி – 627 811,திருநெல்வேலி மாவட்டம் |
6. மண்டல அலுவலர் தென்னை நார் வாரியம், மண்டல அலுவலகம், ஏ.சி தோட்டம், ராஜமுத்திரி – 533101 தொலைபேசி: 0883-2420196 |
11. மண்டல தென்னை நார் மேம்பாடு அலுவலர் தென்னை நார் ஆர்.சி.டி மற்றும் டி.சிபிள்ளையார்பட்டி – 613 643, வயா வல்லம், தஞ்சாவூர் |
8 தென்னை மரம் மற்றும் மகசூல் காப்பீடு
இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், தென்னை காப்பீட்டு திட்டங்களை இயக்கி வருகிறது.
இயற்கை சீற்றங்கள் நோய் மற்றும் பூச்சித்தாக்கம் போன்றவற்றால் ஏற்படும் தவிர்க்க முடியாத இழப்புகளுக்கு ஈடு செய்ய தென்னை மரம் மற்றும் மகசூல் காப்பீட்டு திட்டங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிதியுதவி இவ்வாறு ஏற்படும் பாதிப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும்.
இத்திட்டத்தின் முக்கியத்துவம்:
- தென்னை வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து மொத்தமாக தென்னைக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
- குறிப்பிடப்பட்டுள்ள தென்னை மர இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள்/தென்னை மரங்களுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுதல் ஆகியவற்றிற்கு காப்பீடு வசதி
- தென்னை மரத்தின் வயதையும், எதிர்கால குறைந்தபட்ச விலையையும் கணக்கில் கொண்டு அதிகபட்சமான தொகை வழங்கப்படும்.
காப்பீட்டு உரிமத் தகுதிகள்: தவிர்க்க முடியாத இயற்கை காரணிகளால் தென்னை மரத்துக்கு பாதிப்போ/இழப்போ அல்லது தேங்காய் மகசூல் பாதிப்போ ஏற்பட்டால் காப்பீடு வழங்கப்படும்
9 தேங்காய் மகசூல் மற்றும் தென்னை மரத்திற்கான காப்பீடு
இயற்கையான தீ விபத்து, மின்னல், புயல், ஆலங்கட்டி மழை, மற்றும் சூறாவளி புயல், வெள்ளம், சூழல் புயல் காற்று, வெள்ளத்தில் மூழ்குதல் நிலச்சரிவு, நோய் மற்றும் பூச்சித்தாக்கம் போன்ற தவிர்க்க முடியாத இயற்கை காரணிகளால் தேங்காய் மகசூல் குறைந்ததால் காப்பீடு செய்தோருக்கு இழப்பீடு வழங்கப்படும்.
தென்னந்தோப்புகளில் உள்ள 4-60 வருட தனி தென்னை மரங்களுக்கு மேற்கூறப்பட்ட காரணங்களால் இழப்பு ஏற்பட்டால் இழப்பிட்டு தொகை வழங்கப்படும். கன்றுகளை மறுநடவு செய்த 3 மாதங்கள் கழித்து காப்பீடு செய்ய வேண்டும்.
காப்பீட்டுத் தொகை நிர்ணயம்
பகுதி 1: (தேங்காய் மகசூல்) வட்டத்திற்கு வட்டம் காப்பீட்டுத் தொகை மாறுபடும். வட்டத்தின் உத்திரவாத மகசூலை, முந்தைய வருடத்தில் அந்த மாவட்டத்தின் சராசரி தேங்காய் விலையைப் பெருக்கி காப்பீட்டுத் தொகை கணக்கிடப்படுகிறது.
பகுதி 2: காப்பீட்டுத் தொகை சாகுபடிக்கு ஆகும் இடுபொருள் செலவை பொறுத்து கணக்கிடப்படுகிறது
கட்டணத் தவணை: வட்ட அளவிலான தேங்காய் மகசூல் வேறுபாட்டைப் பொருத்து நிர்ணயம் செய்யப்படும்.
10 ஆதார விலைத் திட்டம்
இந்திய அரசின் ஆதார விலைத் திட்டத்தின் கீழ், மத்திய முதன்மை நிறுவனமாக தேசிய வேளாண்மை கூட்டுறவு சங்கம், ஆதார விலையில் கொப்பரைக் கொள்முதல் செய்து வருகிறது.
- விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையை வழங்குவதே ஆதார விலைத் திட்டத்தின் நோக்கமாகும். வேளாண் விற்பனை விலை நிர்ணயக்குழு, குறைந்த பட்ச ஆதார விலையை கணக்கிடுகிறது.
- தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம், மாநில அரசிடம் ஆலோசித்து, மாநில அளவிலான நிறுவனங்களை நிர்ணயித்து அவர்கள் மூலமாக, பண்ணை அளவில் கொள்முதல் செய்ய கூட்டுறவு விற்பனை சங்கங்களை இயக்கி வருகிறது.
- இத்திட்டம் விவசாயிகளின் நலனைப் பேணி வருகிறது. உற்பத்தி அதிகரித்து, விலைச்சரிவு ஏற்படும் நேரங்களில், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
கொப்பரைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஆதார விலை (ரூபாயில் ஒரு குவின்டாலின் விலை, 10.06.2011 இன் படி)
- மில்லிங் கொப்பரை ……… ரூ.4525/-
- உருண்டை கொப்பரை……. ரூ.4775/-
- மட்டை எடுத்த தேங்காய்….. ரூ.1200/-