சின்ன வெங்காயம் விலை முன்னறிவிப்பு தொடர்பாகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. ‘‘இந்தியாவில் சின்ன வெங்காயம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெருமளவு பயிரிடப் பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக வைகாசி, புரட்டாசி,…
யூரியாவுக்கு பதில் தயிரே போதும்! – முஸாஃபர்பூர் இயற்கை விவசாயிகளின் கலக்கல் முயற்சி
இயற்கை விவசாயத்தில், “செலவு குறைவு, வரவு பெரிது” என்பதுதான் தாரக மந்திரம். அந்த வகையில் இயற்கை விவசாயத்தில் தயிரைப் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து வருகின்றனர் விவசாயிகள். தயிரைப் பயன்படுத்தியே விவசாயமா என்று தோன்றலாம். ஆமாம்… தமிழ்நாட்டிலேயும் இயற்கை விவசாயத்தில் தயிர் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருபடி மேலே போய் தயிரையே சற்று மாற்றி…
ஆடிப்பட்டம் ஒரு பார்வை
வானம் பார்த்து விவசாயம் செய்த காலங்கள் எல்லாம் பொய்த்துவிட்டது என்று சொன்னாலும், ஆடி மாதம் விதைத்தால் அற்புதமான விளைச்சலை அடையலாம் என்னும் நம்பிக்கை இன்றும் விவசாயிகளிடம் உண்டு. அதனால் தான் ஆடி மாதத்துக்கு மட்டும் அதிக பழமொழிகளும் கூறினார்கள். ஆடிக் காற்றில் அம்மையே பறக்கும் என்பதைத்தான், நாம் இன்று ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று…
காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை
காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண்மைத் துறை திங்கள்கிழமை (2020-07-20) வெளியிட்ட அறிவிப்பு:- தோட்டக்கலை பயிா்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் அனைத்து முக்கிய காய்கறிகள் நுகா்வோருக்கு கிடைப்பதை…
மரிக்கொழுந்து சாகுபடி
தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும். இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் நறுமண எண்ணெய் அழகு சாதனப் பொருட்களுக்கு நறுமணமூட்டவும், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும்…
இயற்கை முறையில் சாமை சாகுபடி
மண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம். சிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர் வறட்சி மற்றும் மித வறட்சி பகுதிகளிலும், அனைத்து பருவகால…
பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை
பீஜாமிர்தம் என்றால் என்ன விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும். தயாரிக்க தேவையான பொருட்கள் தண்ணீர் 20 லிட்டர் பசு மாட்டு சாணம் 5 கிலோ பசு மாட்டு கோமியம் 5 லிட்டர் சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை முதல் நாள் மாலை 6 மணிக்கு…
மூலிகை செடிகள் சாகுபடி செய்ய மானியம்
இந்தியாவில் மூலிகையின் தேவை அதிகரிக்கும் அளவு மூலிகை உற்பத்தியானது இல்லை. 90% மேல் கம்பெனிகளின் தேவையானது இயற்கையாக காணப்படும் மூலிகைகளை சேகரித்து அனுப்புவதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே மூலிகை பயிரிடுதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆகையால் மூலிகைப் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேசிய மூலிகைப் பயிர் வாரியமானது 57 தாவரங்களைப்…
புதினா சாகுபடி முறை
புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யகூடிய பயிர்களுள் ஒன்றாகும். இதற்கு பட்டம் எதுவும் கிடையாது. மண் வகைகள் வளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். புதினா களிமண், வண்டல் மண், ஆற்று படுகை மண்களில் நன்றாக வளரக்கூடியது. மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம்…
இயற்கை முறையில் புளியமரம் சாகுபடி
புளியமரம் சகுபாடி குறைந்த செலவில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய ஒன்றாகும். புளி அணைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகும். ஆடிப்பட்டம் புளி சாகுபடி செய்ய சிறந்த பட்டமாகும். புளி வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும். ரகங்கள் புளி ரகங்களில் உரிகம்புளி என்பது தருமபுரி அருகில் உரிகம் என்ற ஊரின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. பிகேஎம்1, தும்கூர்…